செய்திகள்

சித்தராமையாவை ஆதரித்து பிரபல கன்னட நடிகர் சுதீப் பிரசாரம்

Published On 2018-05-04 12:59 IST   |   Update On 2018-05-04 13:02:00 IST
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், முதல் மந்திரி சித்தராமையாவை ஆதரித்து பிரபல கன்னட நடிகர் சுதீப் பிரசாரம் மேற்கொள்கிறார். #Karnatakaassemblyelection #KannadaactorSudeep #Siddaramaiah
பெங்களூர்:

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள் பலர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் முதல் மந்திரி சித்தராமையா போட்டியிடும் சாமுண்டேஸ்வரி மற்றும் பாதாமி ஆகிய தொகுதிகளில் அவரை ஆதரித்து பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் வருகிற 9-ந் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார்.

மேலும் முதல் மந்திரியின் மகன் டாக்டர். யதீந்திரா போட்டியிடும் வருணா தொகுதியிலும் சுதீப் பிரசாரம் செய்து பேரணியில் கலந்து கொள்கிறார்.


பாதாமி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் ஸ்ரீராமுலு, வால்மீகி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவரது வெற்றியை தடுக்க அதே சமுதாயத்தை சேர்ந்த சுதீப், பிரசாரம் செய்தால் வால்மீகி சமுதாய வாக்குகளை தனக்கு சாதகமாக அள்ள முடியும் என்று கணக்கு போட்டு சுதீப்பை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த சித்தராமையா முடிவு செய்துள்ளதாக கூறப் படுகிறது.
#Karnatakaassemblyelection #KannadaactorSudeep #Siddaramaiah

Similar News