செய்திகள்

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய முடியாது - உச்சநீதிமன்றம்

Published On 2018-05-03 08:00 GMT   |   Update On 2018-05-03 08:00 GMT
தமிழக மாணவர்கள் சிபிஎஸ்இ ஒதுக்கிய தேர்வு மையங்களினால் தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CBSE #NEETexam #supremecourt
புதுடெல்லி:

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி நடக்க உள்ள ‘நீட்’ தேர்வில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், 'அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும். பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தி தமிழக மாணவர்களுக்கு தமிழகத்துக்குள் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்' என உத்தரவிட்டது.



இதையடுத்து, தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்திலேயே தற்போது தேர்வு மையங்களை அமைக்க அவகாசம் இல்லை என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்திருந்தது. சிபிஎஸ்இ-யின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் சிபிஎஸ்இ ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களில் தான் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. #CBSE #NEETexam #supremecourt


Tags:    

Similar News