செய்திகள்

ராஜஸ்தானை சூறையாடிய புழுதி புயல் - பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

Published On 2018-05-03 10:45 IST   |   Update On 2018-05-03 11:10:00 IST
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று புழுதி புயலுடன் பெய்த கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. #RajasthanRains
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தின் ஒருசில பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதோடு பலத்த காற்றும் வீசுவதால் மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் மழையினால் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் சரிந்துள்ளன. மேலும் சில இடங்களில் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.



கனமழை மற்றும் புழுதி புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி நேற்று ஒரேநாளில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தோல்பூர் பகுதியில் இரண்டு பேரும், ஆல்வார் பகுதியில் இரண்டு பேரும், பாரத்பூர் பகுதியில் 6 பேரும் கனமழை மற்றும் காற்றினால் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர்.



இந்நிலையில், பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. பருவமழை தொடங்க இருப்பதால் ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அதைத்தொடர்ந்து பஞ்சாப், வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. #RajasthanRain #Rajasthan

Similar News