செய்திகள்

பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சியை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய ஐபிஎஸ் அதிகாரி - விசாரணைக்கு உத்தரவு

Published On 2018-05-02 12:20 GMT   |   Update On 2018-05-02 12:20 GMT
பீகார் மாநிலத்தில் பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சியை துப்பாக்கியால் சுட்டு ஐபிஎஸ் அதிகாரி கொண்டிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. #BiharIPSofficer #farewellparty
பாட்னா:

பீகார் மாநிலம் காதிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சித்தார்த் மோகன் ஜெயின் எஸ்.பி.யாக பணிபுரிந்து வந்தார். மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதே போன்று சித்தார்த் சிபிஐ-க்கு மாற்றப்பட்டார். இதனால் போலீஸ் துறை சார்பாக இவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் பல போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் பதவி உயர்வு கிடைத்த மகிழ்ச்சியில் சித்தார்த் தனது கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டார். இதுகுறித்த வீடியோ தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மாநில போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும், சித்தார்த்தின் பணி உயர்வு குறித்து மீண்டும் ஆலோசனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. திருமண விழாக்களில் கொண்டாட்டத்தின் போது மகிழ்ச்சியில் துப்பாக்கியால் சுடுவதால் பலர் இறக்கின்றனர். ஆனால், போலீஸ் அதிகாரி ஒருவர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #BiharIPSofficer #farewellparty

Tags:    

Similar News