செய்திகள்

ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கும் பியூன் வேலை பார்ப்பவருக்கு ரூ.10 கோடி சொத்து

Published On 2018-05-02 11:26 GMT   |   Update On 2018-05-02 11:26 GMT
ஆந்திராவில் போக்குவரத்து கழக ஊழியரிடம் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லூர்:

ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்ட போக்குவரத்து கழக துணை கண்காணிப்பளர் அலுவலகத்தில் பியூனாக பணியாற்றி வருபவர் நரசிம்ம ரெட்டி (53). இவர் மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம். ஆனால் வருமானத்திற்கு அதிகமான சொத்து இருப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று இவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.7 லட்சம் ரொக்கப்பணம், 2 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.20 லட்சம் வங்கி கணக்குகள் மற்றும் பிளாட் வாங்கியதற்கான சொத்து ஆவணங்கள் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். அவர் வாங்கிய அனைத்து குடியிருப்புகளும் 250 சதுர மீட்டர் பரப்பளவில் இருந்தன. இவ்வாறு அவருக்கு 18 வீடுகள் உள்ளன.

ரூ.1 கோடி மேலான எல்ஐசி எடுத்து உள்ளார். மற்றும் 50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சொத்துக்கள் இவரது  மனைவி மற்றும் உறவினர்கள்  பெயரில் வாங்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் அவரது மனைவி ஹரிபிரியா மற்றும் அவரது தாயார் நாராயணம்மா பெயரில் வாங்கப்பட்டு உள்ளது.

இவற்றின் மதிப்பு ரூ. 10 கோடி என கூறப்படுகிறது. சாதாரண பியூனுக்கு இவ்வளவு சொத்து வந்தது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஆந்திரா மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லூர் மாவட்டத்தின் குண்டலபாலத்தில் 5 ஏக்கர் விவசாய நிலம்.

1996 ல் நெல்லூர் நகரத்தில் உள்ள கோண்டயப்பாலை பகுதியில் 222 சதுர மீட்டர் வீடு

அவரது மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்கள்

நெல்லூர் மாவட்டத்தில் 41.82 ஏக்கர் விவசாய நிலம்.

நெல்லூர் நகரிலுள்ள 17 வீடு வீடுகள்

நெல்லூரில் உள்ள எம்.வி.அக்ராராமத்தில் 100 சதுர அடிகளில் ஒரு ஜி + 2 + பெண்ட் வீடு

அவரது மாமியார் பெயரில் சொத்துகள்

நெல்லூர் கிராமத்தில் பெரமணா கிராமத்தில் 4.06 ஏக்கர் பரப்பளவு.
Tags:    

Similar News