செய்திகள்

கத்வா சம்பவம் குறித்த துணை முதல் மந்திரியின் கருத்துக்கு உமர் அப்துல்லா கண்டனம்

Published On 2018-04-30 19:14 GMT   |   Update On 2018-04-30 19:14 GMT
கத்வா சம்பவம் தொடர்பாக துணை முதல் மந்திரி கவிந்தர் குப்தா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சியும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. 

காஷ்மீரில் கத்வா மாவட்டத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடைபெற்றது. அந்த பேரணியில் கலந்து கொண்ட பா.ஜ.க.வை சேர்ந்த வனத்துறை அமைச்சர் சவுத்ரி லகால் சிங், வர்த்தகத்துறை அமைச்சர் சந்தர் பிரகாஷ் சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதற்கிடையே, துணை முதல் மந்திரியாக இருந்த நிர்மல் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, பா.ஜ.க.வை சேர்ந்த கவிந்தர் குப்தா புதிய துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு நேற்று பதவியேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், கத்வா பலாத்கார சம்பவம் ஒரு சிறிய சம்பவம். இதை நாடு முழுவதும் பேசக்கூடிய அளவிற்கு பெரிதாக்கி இருக்கக் கூடாது. மாநில அரசின் முன் நிறைய சவால்கள் உள்ளன. இந்த விஷயத்தை திரும்பத் திரும்ப பேசுவது தேவையில்லாத ஒன்று என கூறினார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா கத்வா சம்பவம் தொடர்பாக துணை முதல் மந்திரி கவிந்தர் குப்தா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், கத்வா சம்பவம் தொடர்பாக மெகபூபா முப்தி மற்றும் அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் துணை முதல் மந்திரி கவிந்தர் குப்தாவிடம் இருந்து வேறு என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்? என பதிவிட்டுள்ளார். #Tamilnews
Tags:    

Similar News