செய்திகள்

24 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் இன்று சிறைபிடித்தது

Published On 2018-03-28 16:39 IST   |   Update On 2018-03-28 16:39:00 IST
பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடித்ததாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 24 மீனவர்களை அந்நாட்டு கடலோர காவல் படையினர் இன்று கைது செய்தனர். #pakistan #indianfishermen
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் போர்பந்தர் நகரைச் சேர்ந்த சில மீனவர்கள் 4 நாட்களுக்கு முன் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடித்ததாக 24 மீனவர்களை அந்நாட்டு கடலோர காவல் படையினர் இன்று கைது செய்ததாக போர்பந்தர் மீனவ சங்க செயலாளர் மணிஷ் லோதாரி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதமும் இதே போல் 42 இந்திய மீனவர்களை கைது செய்ததுடன், 8 மீன்பிடி படகுகளையும் பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தது நினைவிருக்கலாம். #PMSA #pakistan #indianfishermen

Similar News