செய்திகள்

தெலுங்கானா மாநிலத்தில் கிணற்றுக்குள் ஆட்டோ ரிக்‌ஷா கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி

Published On 2018-03-25 20:24 IST   |   Update On 2018-03-25 20:24:00 IST
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் இன்று விவசாய கிணற்றுக்குள் ஆட்டோ ரிக்‌ஷா கவிழ்ந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #roadaccident
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள முக்பல் பகுதியில் இருந்து மென்டோரா என்ற இடத்தை நோக்கி சுமார் 14 பயணிகளை ஏற்றிய ஆட்டோ ரிக்‌ஷா சென்று கொண்டிருந்தது. வேகமாக வந்த ஆட்டோ ரிக்‌ஷா ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டின் இழந்து சாலையின் பக்கவாட்டில் உள்ள விவசாய கிணற்றுக்குள் விழுந்தது.

இந்த கோர விபத்தில் 6 குழந்தைகள், 40-50 வயதுக்குட்பட்ட 4 பெண்கள் உள்பட பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த தெலுங்கானா மாநில முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். #tamilnews  #roadaccident

Similar News