செய்திகள்

யோகா ஆசிரியராக மாறிய பிரதமர் மோடி

Published On 2018-03-25 14:13 IST   |   Update On 2018-03-25 15:48:00 IST
மான் கி பாத் நிகழ்ச்சியின் போது, தான் யோகாசனம் செய்வது போன்ற அணிமேசன் வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டார். #PMModi #MaanKiBaat #InternationalYogaDay

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை ரேடியோவில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இந்த ஆண்டின் மூன்றாவது உரையை இன்று நிகழ்த்தினார். அப்போது யோகாசனம் குறித்து அவர் பேசினார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் யோகா ஆசிரியர் அல்ல. ஆனால், நிச்சயமாக ஒரு யோகா பயிற்சியாளர், இப்போது சிலர், தங்கள் படைப்பாற்றல் மூலம் என்னை ஒரு யோகா ஆசிரியராக்கி, என் யோகா பயிற்சி அமர்வின் 3-டி அனிமேஷன் வீடியோவையும் தயார் செய்துள்ளனர்.

ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாட 100 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. கடந்த மூன்று சர்வதேச யோகா தினங்களில் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் ஆர்வத்துடன் உற்சாகமாக கலந்து கொண்டனர். இந்த முறையும், நான் யோகா செய்வதோடு, நம் குடும்பத்தினர், நன்பர்களை மற்றும் மற்றவர்களையும் யோகா செய்ய வைக்க இப்போது முதலே நாம் முயற்சிக்க வேண்டும்.

பொதுவாக நமது நாட்டின் தொலைகாட்சி மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் யோகா குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஆண்டு முழுவதும் மேற்கொண்டு வருகின்றனர். இன்று முதல் யோகா தினம் வரையில் யோகா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை இப்போது நாம் தொடங்கலாமா?

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சுகாதார துறையில் இப்போது நாடு வழக்கமான அணுகுமுறையில் இருந்து முன்னோக்கி நகர்ந்துள்ளது. முன்னர் சுகாதாரம் குறித்த அனைத்து விசயங்களும் சுகாதாரத்துறை மந்திரியிடம் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது ஆயுஷ் அமைச்சகம், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம், நுகர்வோர் விவகார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் உட்பட அனைத்து துறை மந்திரிகளும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இணைந்து செயல்படுகின்றனர், எனவும் கூறினார்.

அதன் பின் மன் கி பாத் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தான் யோகாசனம் செய்யும்படியான அணிமேசன் வீடியோவையும் பிரதமர் மோடி வெளியிட்டார். அதில் மோடி முக்கோனாசம் செய்வது போல் வீடியோ இருந்தது. #PMModi #MaanKiBaat #InternationalYogaDay #tamilnews

Similar News