செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இருவர் காயம்

Published On 2018-03-02 00:30 IST   |   Update On 2018-03-02 00:30:00 IST
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். #JammuKashmir #PakArmyattack #Poonch #ceasefireviolation
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்தப்படி உள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட் பகுதியில் நேற்று அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் அங்கு உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

இதேபோன்று ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜம்மு அருகே சன்ஜவான் ராணுவ முகாமுக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கடந்த மாதம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பலாகோட் செக்டாரில் ஊடுருவ முயன்ற 6 பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டு கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #PakArmyattack #Poonch #ceasefireviolation #tamilnews

Similar News