செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உடன் ஜோர்டான் மன்னர் அப்துல்லா சந்திப்பு

Published On 2018-03-01 21:39 IST   |   Update On 2018-03-01 21:39:00 IST
அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஜோர்டான் மன்னர் அப்துல்லா இன்று மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுடெல்லி:

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா அரசுமுறை சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்தார். அவருக்கு இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. டெல்லி ஐ.ஐ.டி.யில் நடந்த கூட்டம், இந்திய இஸ்லாமிய கருத்தரங்கு ஆகியவற்றில் அவர் பங்கேற்றார்.

இந்நிலையில், இன்று மாலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி மாளிகையில் மன்னர் அப்துல்லா சென்று சந்தித்தார். சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து, மன்னர் அப்துல்லாவுக்கு ஜனாதிபதி இரவு விருந்து அளிக்க உள்ளார். #TamilNews

Similar News