செய்திகள்

கர்நாடகா பாகுபலி கோவிலுக்கு நாளை ராஜ்நாத் சிங் வருகை

Published On 2018-02-24 10:41 GMT   |   Update On 2018-02-24 10:41 GMT
கர்நாடகா மாநிலம் சரவணா பெலகோலாவில் ஹோமதீஸ்வரா கோவிலில் நடைபெறும் மகாமஸ்தாபிஷேக விழாவில் நாளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொள்கிறார். #RajnathSingh #Mahamasthakabhisheka

சரவணா பெலகோலா:

கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள சந்திரகிரி மலையில் உள்ள சரவணா பெலகோலாவில் ஹோமதீஸ்வரா கோவில் உள்ளது. இங்கு 58 அடி உயரத்தில் சித்தா பாகுபலியின் சிலை உள்ளது. இந்த கோவிலில் 12 வருடத்திற்கு ஒருமுறை மகாமஸ்தாபிஷேக விழா நடைபெறும். தற்போது இந்த விழா அங்கு நடந்து வருகிறது. இதில் இந்தியா முழுவதிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

நிறைவு நாளான நாளை நடைபெறும் விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள உள்ளார். டெல்லியில் இருந்து எல்லைப்பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் மூலம் ராஜ்நாத் சிங் வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.



இந்த விழாவின் முதல் 4 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். பாகுபலி சிலைக்கு தினமும் பால் மற்றும் பல்வேறு புனித பொருட்களால் பூஜை செய்யப்பட்டு வருகிறது. பல லட்சம் பக்தர்கள் திரண்டுள்ளதால் பாகுபலி சிலையை தரிசிக்க நீண்டநேரம் ஆகிறது. பக்தர்கள் 5 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்கிறார்கள்.

சிலையை ஆகாயத்தில் இருந்து பார்க்கும் வகையில் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களை ஏற்றி வரும் ஹெலிகாப்டர் 8 நிமிடம் சிலைக்கு மேல் வட்டமிட்டு சுற்றி காண்பிக்கிறது. இதற்கு நபருக்கு ரூ.2100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பாகுபலி கோவிலில் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக மந்திரி உமாஸ்ரீ ஆகியோர் தரிசனம் செய்தனர். #RajnathSingh #Mahamasthakabhisheka #tamilnews
Tags:    

Similar News