செய்திகள்

ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த வார்த்தையாக ‘ஆதார்’ தேர்வு

Published On 2018-01-28 16:14 GMT   |   Update On 2018-01-28 16:14 GMT
ஆக்ஸ்போர்டு அகராதியின் கடந்த ஆண்டுக்கான சிறந்த இந்தி வார்த்தையாக ‘ஆதார்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. #Aadhaar #OxfordDictionary #HindiWordOf2017

புதுடெல்லி: 

ஆக்ஸ்போர்டு அகராதியின் கடந்த ஆண்டுக்கான சிறந்த இந்தி வார்த்தையாக ‘ஆதார்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அரசு மானியங்கள், லைசென்ஸ், வங்கி, பான் கார்டு,  குடும்ப அட்டை என பல்வேறு பயன்பாட்டுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய மக்களின் அன்றாட வாழ்வில் ஆதார் தவிர்க்க முடியாததாகிவிட்டது. நம் நாட்டில் ஆதார் என்ற வார்த்தையை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று கூட சொல்லலாம். ஆதார் அடையாள அட்டை, நாடு முழுவதும் பெரும்பாலானோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணியை விரைந்து முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், நமது அன்றாட வாழ்வில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ள ஆதாருக்கு தற்போது மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில், ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த இந்தி வார்த்தையாக ஆதார் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நோட்பந்தி, மித்ரன் உள்ளிட்ட வார்த்தைகளும் சிறந்த வார்த்தைகளுக்கான பட்டியலில் பரிசீலிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பிரபலமானது என்பதால் ஆதார் சிறந்த வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டு, ஆக்ஸ்போர்டு அகராதியில் அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  #Aadhaar #OxfordDictionary #HindiWordOf2017 #tamilnews
Tags:    

Similar News