செய்திகள்

11 ஆண்டுகளாக விசாரணைக்கு ஆஜராகாததால் உ.பி மந்திரிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

Published On 2018-01-16 23:04 IST   |   Update On 2018-01-16 23:04:00 IST
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயத்துறை மந்திரியாக உள்ள சூர்ய பிரதாப் ஷாஹி மீதான வழக்கு விசாரணைக்கு 11 ஆண்டுகளாக ஆஜராகாமல் இருந்த நிலையில், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயத்துறை மந்திரியாக உள்ள சூர்ய பிரதாப் ஷாஹி மீதான வழக்கு விசாரணைக்கு 11 ஆண்டுகளாக ஆஜராகாமல் இருந்த நிலையில், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் விவசாயத்துறை மந்திரியாக உள்ள சூர்ய பிரதாப் ஷாஹி மீது அரசுப்பணிக்கு இடையூறு செய்ததாக 1994-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதன் மீதான விசாரணை 24 ஆண்டுகளாக நடந்து வருகின்றது.

காஸ்யா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணைக்காக 11 ஆண்டுகளாக சூர்ய பிரதாப் ஷாஹி ஆஜர் ஆனது இல்லை. இந்நிலையில், இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அவர் ஆஜர் ஆகாத நிலையில், கூடுதல் மாஜிஸ்திரேட் மந்திரிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இதனால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News