செய்திகள்

டிரைவர் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்ப்பு: தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் கேரள ரெயில்கள் தாமதம்

Published On 2018-01-16 19:49 IST   |   Update On 2018-01-16 19:49:00 IST
கேரள மாநிலத்தில் ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை முன்கூட்டியே அறிந்த டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் ரெயிகள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் புளிச்சோடு கம்மாத்தூர் என்ற இடம் உள்ளது. நேற்று பகல் இந்த வழியாக புனே - எர்ணா குளம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது.

இந்த வழியாக ரெயில் சென்றபோது ரெயில் தண்டவாளத்தில் ஏதோ பழுது ஏற்பட்டு இருப்பதை அந்த ரெயிலின் டிரைவர் உணர்ந்தார். உடனே அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலின் வேகத்தை குறைத்து அந்த இடத்தை கடந்து சென்றார்.

மேலும் இதுபற்றி அவர் அருகில் உள்ள ரெயில் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். உடனே ரெயில்வே அதிகாரிகளும், ஊழியர்களும் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

உடனடியாக தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற அனைத்து ரெயில்களும் 2 மணி நேரம் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலுக்கு நாச வேலை காரணமா? என்று ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Similar News