செய்திகள்

நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணையில் மெத்தனம்: சி.பி.ஐ. மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

Published On 2018-01-16 07:20 IST   |   Update On 2018-01-16 07:20:00 IST
சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணையை மெத்தனமாக நடத்தி வருவதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். #CoalScam #SupremeCourt #CBI
புதுடெல்லி:

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் நடத்தி வருகின்றன. நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணையை சீர்குலைக்க முயன்றதாக அப்போதைய சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா மீதான குற்றச்சாட்டையும் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி எம்.பி.லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் நிலக்கரி சுரங்க ஊழல் விசாரணையை மெத்தனமாக நடத்தி வருவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அதற்கு சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு வக்கீல் ஆர்.எஸ்.சீமா ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ரஞ்சித் சின்காவுக்கு எதிரான விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

விசாரணையை முடிக்க மேலும் 6 மாதங்கள் ஆகும் என்று சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 2-வது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Similar News