செய்திகள்

இந்தியாவின் முதல் நகரமாக தனக்கென்று தனி ‘லோகோ’வை வடிவமைத்தது பெங்களூரு

Published On 2017-12-25 11:51 IST   |   Update On 2017-12-25 11:51:00 IST
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவின் புதிய லோகோவை பெங்களூரு வளர்ச்சித் துறை மந்திரி கே.ஜே. ஜார்ஜ் வெளியிட்டார்.
பெங்களூரு:

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரு இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகும். ஏராளமான பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக தனக்கென்று தனி லோகோவை பெங்களூரு நகரம் பெற்றுள்ளது. அந்த லோகோவை பெங்களூரு வளர்ச்சித்துறை மந்திரி நேற்று வெளியிட்டார். பெங்களூரு நகரின் கலை, இலக்கியம், பண்பாட்டை குறிக்கும் வகையில் இந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.



அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில சுற்றுலாத்துறை மந்திரி பிரியங்கா பேசுகையில் 'பெங்களூருவின் புகழை உலக முழுவதும் பரப்பும் விதமாக இந்த லோகோ வெளியிடப்பட்டது. லோகோவில் பெங்களூரு என்ற ஆங்கில வார்த்தையின் முதல் இரண்டு எழுத்துகளும், கடைசி எழுத்தும் மட்டும் சிவப்பு நிறத்தில் உள்ளது. இது பெங்களூரு நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் அனைவரும் மிகுந்த மரியாதையோடு நடத்தப்படுவார்கள்' என தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவின் நியூயார்க், நெதர்லாந்தின் ஆர்ம்ஸ்டர்டம் போன்ற உலகில் பல முக்கிய நகரங்கள் தனக்கென தனி லோகோ வைத்துள்ளன. அதன் வரிசையின் பெங்களூருவும் இடம்பெற்றுள்ளது.


இந்த லோகோவை நமூர் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. லோகோவில் உள்ள ஆங்கில் வார்த்தைகள் கன்னட மொழியை போன்று வடிவமைப்பை பெற்றுள்ளன. லோகோ வடிவமைப்பு போட்டியில் கலந்து கொண்ட நமூர் நிறுவனம் வெற்றி பெற்றதுடன் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை கர்நாடகா அரசிடம் இருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News