செய்திகள்

இயேசுவின் உன்னத போதனைகளை நினைவு கூர்வோம்: பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து

Published On 2017-12-25 02:59 GMT   |   Update On 2017-12-25 02:59 GMT
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி பிரதமர் மோடி, கிறிஸ்தவ மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இயேசு பிரான் அவதரித்த தினமாக இன்று உலகம் முழுவதும் கிறி்ஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அனைத்து தேவாலயங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் சிறப்பு பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘கடவுள் இயேசு அவதரித்த தினமான இன்று அவர் அளித்த போதனைகளை நினைவு கூர்வோம், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதே போல, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். ‘இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர்’ என்று தனது வாழ்த்துச் செய்தியில் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், பணாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த மதன் மோகன் மாலவியா நினைவு தினமான இன்று அவருக்கும் தன்னுடைய புகழஞ்சலியை தெரிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News