செய்திகள்

மம்தா பானர்ஜி வரைந்த ஓவியம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறும்: ராம்நாத் கோவிந்த் பேச்சு

Published On 2017-11-28 15:16 GMT   |   Update On 2017-11-28 16:17 GMT
மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி இன்று அளித்த பரிசு தனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது என குறிப்பிட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி மாளிகையில் அந்த ஓவியம் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தா:

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ராம்நாத் கோவிந்த் இன்று முதன்முறையாக மேற்கு வங்காளம் மாநிலத்துக்கு வந்தார். கொல்கத்தா நகரில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் மாநில அரசின் சார்பில் இன்று மாலை மாபெரும் வரவேற்பு அளிக்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தனது கைப்பட வரைந்த ஓவியத்தை ஜனாதிபதிக்கு நினைவு பரிசாக அளித்தார்.

அதை மகிழ்வுடன் ஏற்றுகொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மம்தா பானர்ஜி தனது கைப்பட வரைந்து எனக்கு பரிசாக அளித்த ஓவியம் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலையரங்கில் அது இடம்பெறும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, 17 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி உள்ளிட்ட பல போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை ஜனாதிபதி பாராட்டினார். இதுபோன்ற பல வெற்றிகளை பல துறைகளிலும் இந்த அரசு பெற வேண்டும் எனவும் அவர் வாழ்த்தினார்.
Tags:    

Similar News