செய்திகள்

லாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை

Published On 2017-11-24 21:12 GMT   |   Update On 2017-11-24 21:12 GMT
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் மகனான தேஜ் பிரசாத் யாதவ் கன்னத்தில் அறைபவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று பாரதி ஜனதா பிரமுகர் அறிவிப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா:

ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். இவர், நிதிஷ் குமார் மந்திரிசபையில் மந்திரியாக இருந்தவர். இவர், பா.ஜனதாவை சேர்ந்த துணை முதல்-மந்திரி சுசில் குமார் மோடிக்கு சமீபத்தில் ஒரு மிரட்டல் விடுத்தார்.

‘சுசில் குமார் மோடியின் மகன் திருமணம் டிசம்பர் 3-ந் தேதி நடக்கும்போது, சுசில் குமார் மோடியின் வீடு புகுந்து அவரை அடிப்போம்’ என்று அவர் கூறினார். இந்த பேச்சு, வீடியோ வடிவில் வைரலாக பரவியது. இதற்கு பதிலடியாக, பாட்னா மாவட்ட பா.ஜனதா ஊடக பொறுப்பாளர் அனில் சானி, ‘தேஜ் பிரதாப் யாதவை கன்னத்தில் அறைபவருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். அவர் மன்னிப்பு கேட்கக்கோரி, அவரது வீடு முன்பு போராட்டம் நடத்துவோம்’ என்று கூறினார்.

அனில் சானியின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில பா.ஜனதா அறிவித்துள்ளது.
Tags:    

Similar News