செய்திகள்

ரெயில் விபத்துகளை தடுக்க இஸ்ரோ தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு திட்டம்

Published On 2017-09-30 00:27 GMT   |   Update On 2017-09-30 00:27 GMT
பாதுகாப்பான ரயில் பயணத்துக்காக இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றத் திட்டமிடப்பட்டிருப்பதாக ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மும்பை:

சமீபகாலமாக ரெயில்கள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருவதையடுத்து ரெயில்வே துறை மந்திரியாக இருந்த சுரேஷ் பிரபு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ரெயில்வே துறைக்கான புதிய மந்திரியாக பியூஷ் கோயல் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் ரெயில் விபத்துகள் குறித்து பேசிய அவர் சமீபகாலமாக அதிகபடியான ரெயில் விபத்துகள் ஏற்படுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவற்றிற்கு தீர்வு காணவேண்டியது உடனடித் தேவையாகி விட்டது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சில நாட்களுக்கு முன் இஸ்ரோ தலைவர் கிரண்குமாரை சந்தித்தபோது பாதுகாப்பான ரெயில் பயணங்களை உறுதி செய்ய இஸ்ரோ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், மேலோட்டமான கருத்துக்களுடனேயே ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக்குப் பின் ரெயில்வே பாதுகாப்புக்கு விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான சிறப்பான யோசனைகள் கிடைத்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து ரெயில் விபத்துகளை குறைப்பதற்கு இஸ்ரோ தொழில்நுட்பம் விரைவில் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News