செய்திகள்

3 வயது குழந்தையை வாழும் கடவுளாக்கிய நேபாள மக்கள்

Published On 2017-09-28 11:19 GMT   |   Update On 2017-09-28 11:19 GMT
நேபாளம் நாட்டில் மூன்று வயது பெண் குழந்தையை வாழும் தெய்வம் என கூறி காவி உடை அணிவித்து கோவிலில் தங்க வைக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காத்மாண்டு:

நேபாள நாட்டின் உள்ள இந்துக்கள் பாரம்பரியமாக சிறுமிகளை தேர்ந்தெடுத்து அவருக்கு குமாரி என பட்டமளித்து குறிப்பிட்ட வயது வரை அவரை கடவுளாக நினைத்து வழிபாடுகள் செய்வர். அவருக்கு சிறப்பு பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர். சிறுமி ஆண்டிற்கு 13 முறை மட்டுமே கோவிலை விட்டு வெளியே வர முடியும்.

அவ்வகையில் நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மண்டில் டிரிஷ்னா ஷாக்யா என்ற 3 வயது குழந்தையை கடவுள் என கூறி நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க அரண்மனையில் தங்கவைத்துள்ளனர்.

இந்நிலையில், ஷாக்யாவை குமாரியாக நியமிப்பதற்கான பூஜை நேற்று இரவு தொடங்கியது. சிறுமிக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது. அந்த குழந்தையின் தந்தை குழந்தையை அவர்கள் வீட்டிலிருந்து கோவிலுக்கு அழைத்து வந்து அவர்களிடம் ஒப்படைத்தார்.

இந்த நம்பிக்கையானது பல ஆண்டுகளாக நேபாளம் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News