செய்திகள்

பொருளாதார வீழ்ச்சியை பா.ஜனதா தலைவர்களே ஒப்புக்கொண்டு விட்டனர்: ராகுல்காந்தி

Published On 2017-09-28 06:18 GMT   |   Update On 2017-09-28 06:18 GMT
பொருளாதார வீழ்ச்சியை பா.ஜனதா தலைவர்களே ஒப்புக்கொண்டு விட்டனர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.


பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண்ஜெட்லி மீது யஷ்வந்த்சின்கா குற்றம் சாட்டியிருப்பது பற்றி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்த கருத்து வருமாறு:-

பா.ஜனதா மூத்த தலைவரான யஷ்வந்த் சின்கா எழுதியுள்ள கட்டுமரையை நான் படித்தேன். மோடியும், ஜெட்லியும் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி விட்டதாக அவர் எழுதியுள்ளார். இது எனது கருத்து அல்ல, பா.ஜனதா தலைவர் ஒருவரின் கருத்து.

நாட்டின் பொருளாதாரம் தற்போது உச்சகட்ட குழப்பத்தில் உள்ளது. இதற்கு இந்த நாட்டை வழி நடத்திச் செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், பெண்கள் மற்றும் சாமானிய மக்களின் குரலை அரசு செவி கொடுத்து கேட்காததுதான் காரணம்.

பா.ஜனதாவைச் சேர்ந்த பெரும் முதலாளிகளின் குரல்களை மட்டுமே கேட்கின்றனர். தங்கள் சொந்த கருத்துக்களை ‘மன்கி பாத்’ மூலம் மக்களிடம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

Tags:    

Similar News