செய்திகள்

கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சியை பிடிப்பது உறுதி: மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

Published On 2017-09-23 11:23 IST   |   Update On 2017-09-23 11:23:00 IST
கர்நாடகாவில் காங்கிரசுக்கு எதிரான அலை வீசுகிறது, பா.ஜ.வுக்கு ஆதரவான அலையும் வீசுவதால் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறுவது உறுதி என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக மாநில பாரதிய ஜனதா பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகாவில் காங்கிரசுக்கு எதிரான அலை வீசுகிறது, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான அலையும் வீசுகிறது. எனவே 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறுவது உறுதி.

இதற்கு முன்பு மெத்தம் உள்ள 224 தொகுதிகளில் 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எள்று கணிக்கப்பட்டிருந்தது. தற்போது 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது.

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி உள்ளார். அவர் ஜாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்க முயற்சி செய்கிறார். அவரது பிரிவினை அரசியலை கர்நாடக மக்கள் வெறுக்க தொடங்கி உள்ளனர்.

எனவே பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. மோடியின் செயல்பாட்டை கர்நாடக மக்கள் ஆதரிக்க தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News