செய்திகள்

கொசுக்களை ஒழிக்கக்கோரி மனு: நாங்கள் என்ன கடவுளா? எனக் கேட்ட நீதிபதிகள்

Published On 2017-09-23 00:27 GMT   |   Update On 2017-09-23 00:27 GMT
கொசுக்களை முழுமையாக ஒழிக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், நாங்கள் ஒன்றும் கடவுள் இல்லை என கூறியுள்ளனர்.
புதுடெல்லி:

கொசுக்களால் பல்வேறு நோய்கள் பரவி வருவதால், அவற்றை அழிக்க உரிய நெறிமுறைகளை வகுக்க ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தனேஷ் லெஷ்தான் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நேற்று நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, “ஒவ்வொரு வீடாகச் சென்று அங்கு கொசுக்கள் இருக்கிறதா அல்லது ஈக்கள் இருக்கிறதா என்று கண்காணித்து எங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. நாட்டில் உள்ள கொசுக்களை எல்லாம் அழிக்க வேண்டும் என்றால் அது கடவுளால் மட்டுமே முடியும். அத்தகைய செயலை செய்து முடிக்க நாங்கள் ஒன்றும் கடவுள் அல்ல” என்று நீதிபதிகள் காரசாரமான கருத்துக்களை தெரிவித்தனர்.

பின்னர், இது போன்ற வழக்குகள் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணாகாதீர்கள் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் இம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News