செய்திகள்

மத்திய மந்திரிசபை 3 நாளில் மாற்றம்?: அமித்ஷா வீட்டில் பா.ஜனதா உயர்மட்ட குழு ஆலோசனை

Published On 2017-08-31 09:19 GMT   |   Update On 2017-08-31 09:19 GMT
பிரதமர் மோடி சீனா செல்வதற்கு முன்பு மந்திரிசபையை மாற்றி அமைப்பது குறித்து தேசிய தலைவர் அமித்ஷா வீட்டில் பாரதிய ஜனதா உயர்மட்ட குழுவில் ஆலோசிக்கப்பட்டது.
புதுடெல்லி:

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வீட்டில் இன்று உயர்மட்டக் குழு ஆலோசனை நடந்தது.

இந்த கூட்டத்தில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி உள்பட 8 மந்திரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி சபையை மாற்றி அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி சீனா செல்வதற்கு முன்பு மந்திரிசபையை மாற்றி அமைப்பது என்று ஆலோசிக்கப்பட்டது.

இதனால் மத்திய மந்திரி சபை 3 நாளில் மாற்றி அமைக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் மோடியின் மந்திரிசபையில் அ.தி.மு.க. இடம் பெறலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. மிகவும் நெருக்கமாக இருப்பதால் அந்த கூட்டணியில் இடம் பெற்று மந்திரிசபையில் சேரலாம் என்றும் தம்பிதுரை, மைத்ரேயன் ஆகியோர் மந்திரிசபையில் இடம் பெறலாம் என்று தெரிகிறது.

இதே போல பீகாரைச் சேர்ந்தவர்களுக்கும் மந்திரி சபையில் இடம் கிடைக்கும். நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 3 பேருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் இணை மந்திரிகளாக இருக்கும் 5 பேர் கேபினட் அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News