செய்திகள்

மழையால் தவிக்கும் மும்பைவாசிகள் எனது வீட்டை பயன்படுத்தி கொள்ளலாம்: பா.ஜ.க. மந்திரி வேண்டுகோள்

Published On 2017-08-30 12:37 GMT   |   Update On 2017-08-30 12:37 GMT
மழையில் சிக்கி பாதிப்புக்கு உள்ளான மும்பைவாசிகள் எனது அரசு வீட்டை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம் என பா.ஜ.க. மந்திரி கிரிஷ் பாபட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை:

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை நகரம் முழுவதும் கடும் வெள்ளம் ஏற்பட்டது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிப்படைந்தது. மாநில அரசு மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த மாநில மந்திரி கிரிஷ் பாபட், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மும்பைவாசிகள் யார் வேண்டுமானாலும் எனது அரசு வீட்டை பயன்படுத்தலாம் என பேஸ்புக்கில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதிவிடுகையில், ‘‘எனது அரசு வீடான தியானேஷ்வரி புனேவில் உள்ள மலபார் ஹில்லில் அமைந்துள்ளது. எனவே, கோட்டை மற்றும் மந்திராலயா பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் எனது அரசு வீட்டை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். நிலைமை சீரானதும் அவர்களது வீட்டுக்கு திரும்பலாம்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News