செய்திகள்

டிப்ளமோ இன் ஜி.எஸ்.டி - டெல்லி பல்கலை-யில் விரைவில் அறிமுகம்

Published On 2017-07-15 04:33 IST   |   Update On 2017-07-15 04:33:00 IST
சமீபத்தில் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி குறித்த டிப்ளமோ படிப்பு வணிகவியல் துறையில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

சமீபத்தில் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி குறித்த டிப்ளமோ படிப்பு வணிகவியல் துறையில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் இம்மாதம் முதல் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) அமல்படுத்தப்பட்டது. எதிர்ப்புகள் மற்றும் வரவேற்புகளுக்கு மத்தியில் அமல்படுத்தப்பட்ட இந்த சட்டத்தில் நான்கு முறையிலான வரிவிதிப்பு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி குறித்த டிப்ளமோ படிப்புகள் விரைவில் அமல்படுத்த இருப்பதாக டெல்லி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வணிகவியல் துறையின் கீழ் இந்த டிப்ளமோ படிப்பு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணைய குற்றங்களை தடுக்க கொண்டு வரப்பட்டுள்ள சைபர் சட்டங்கள் குறித்த முதுகலை டிப்ளமோ படிப்பு அறிவியல் துறையின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கல்வியாண்டுக்கு 100 மாணவர்கள் மேற்கண்ட பிரிவுகளில் சேர்க்கப்படுவார்கள் என்றும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தெரிவித்துள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Similar News