செய்திகள்
சபரிமலை உண்டியலில் பாகிஸ்தான் கரன்சி: போலீசார் விசாரணை
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலின் உண்டியலில் பாகிஸ்தான்கரன்சி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சபரிமலை:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை பிரசித்தி பெற்றது. இங்குள்ள ஐயப்பன் கோயிலுக்கு 48 நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி சென்று ஐயப்பனை தரிசித்து விட்டு திரும்புவார்கள். நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் கோயில் திறந்திருக்கும். அதன்பின் கோயில் நடை சாத்தப்படும். ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் பூஜையின் போது நடை திறக்கப்படும்.
இந்நிலையில், சபரிமலை கோயிலில் சமீபத்தில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோயில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. அதில் பாகிஸ்தான் கரன்சியான 20 ரூபாய் நோட்டு ஒன்று இருந்தது தெரிய வந்தது.
சபரிமலை உண்டியலில் பாகிஸ்தான் கரன்சி வந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், “பாகிஸ்தான் கரன்சியை உண்டியலில் போட்டது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.