செய்திகள்

பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்டு: மும்பை கோர்ட்டு உத்தரவு

Published On 2017-07-06 00:37 GMT   |   Update On 2017-07-06 00:38 GMT
பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
மும்பை:

தொழில் அதிபர் விஜய் மல்லையா 17 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக்கொண்டு லண்டனில் குடியேறிவிட்டார். இதில், ஐ.டி.பி.ஐ. வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.750 கோடிக்கும் மேற்பட்ட கடனும் அடங்கும்.

இதுபற்றி அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து, சமீபத்தில் மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விஜய் மல்லையா மீதான இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார். 61 வயதான விஜய் மல்லையா சமீபத்தில் லண்டனில் போலீசாரிடம் சிக்கினார். பின்னர், அவரை அங்குள்ள கோர்ட்டு ஜாமீனில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News