செய்திகள்

வாரணாசி தொகுதியில் மேலும் ஒரு கிராமத்தை பிரதமர் மோடி தத்தெடுத்தார்

Published On 2017-07-03 11:12 IST   |   Update On 2017-07-03 11:12:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள மல்யுத்த வீரரர்கள் கிராமத்தை பிரதமர் நரேந்திர மோடி தத்து எடுத்துள்ளார்.
வாரணாசி:

ஒவ்வொரு எம்.பியும் ஒரு கிராமத்தை தத்து எடுத்து மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன் பேரில் எம்.பி.க்கள் தாங்கள் தேர்வான தொகுதியில் உள்ள கிராமங்களில் ஒன்றை தத்து எடுத்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி தொகுதியில் இருக்கும் ஜெய்பூர் எனும் கிராமத்தை தத்து எடுத்தார். அந்த கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.

பிறகு நாக்பூர் என்றொரு கிராமத்தையும் தத்து எடுத்தார். இந்த கிராமத்திலும் பிரதமர் மோடி உத்தரவின் பேரில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவதாக மேலும் ஒரு கிராமத்தை தத்து எடுத்துள்ளார். அந்த ஊரின் பெயர் காக்ராகியா. இந்த கிராமத்தில் நிறைய மல்யுத்த வீரர்கள் உள்ளனர். எனவே உத்தரபிரதேச மக்கள் இந்த கிராமத்தை “ மல்யுத்த வீரர்களின் கிராமம்” என்று அழைக்கிறார்கள்.

தற்போது இந்த கிராமத்தை பிரதமர் மோடி தத்து எடுத்து இருப்பதால் அனைவரது கவனமும் அந்த ஊர் மீது திரும்பி உள்ளது. இந்த கிராம மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்யுமாறு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ள காக்ராகியா கிராம மக்கள், பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

Similar News