செய்திகள்

லாலு, கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக செயல்படும் சத்ருகன் சின்காவை நீக்க வேண்டும்: சுஷில்குமார் மோடி

Published On 2017-05-23 15:24 IST   |   Update On 2017-05-23 15:24:00 IST
லாலு, கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக செயல்படும் சத்ருகன் சின்காவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.
பாட்னா:

நடிகர் சத்ருகன் சின்கா பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். பாட்னா தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக இருக்கிறார். பீகார் சட்டசபை தேர்தலில் தன்னை முதல்- மந்திரி வேட்பாளராக பா.ஜனதா அறிவிக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருக்கிறார்.

இந்த நிலையில் பா.ஜனதா மேலிடத் தலைவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் சத்ருகன் சின்கா அடிக்கடி முதல்-மந்திரி நிதீஷ் குமாரை சந்தித்து வருகிறார். சமீப காலமாக லாலு பிரசாத், அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இதையடுத்து சத்ருகன் சின்காவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் எனறு மாநில பா.ஜனதா தலைவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான சுஷில்குமார் மோடி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.



மிகவும் பிரபலமாக இருப்பவர்கள் (சத்ருகன் சின்கா) கட்சிக்கு மிகவும் விசுவாச மற்றவர்களாக இருக்கிறார்கள். இதுபோன்ற துரோகிகளை கட்சியை விட்டு விரைவில் தூக்கி எறிய வேண்டும்.

‘சத்ரு’ என்றாலே விரோதி, பகைவன் என்று அர்த்தம். பா.ஜனதாவின் ‘சத்ரு’ லாலு, நிதிஷ்குமார் போன்றவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

Similar News