செய்திகள்

திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்

Published On 2017-05-03 19:27 IST   |   Update On 2017-05-03 19:27:00 IST
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 64-வது திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார். இயக்குநர் ராஜூ முருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் விருதுகளை பெற்றார்.
புதுடெல்லி:

64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து, சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சுந்தர் ஐயர் பெற்றனர். சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படம் சார்பாக அதன் இயக்குநர் ராஜூ முருகன் விருதினை பெற்றார்.

தர்மதுரை படத்தின் எந்த பக்கம் பாடலுக்காக வைரமுத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 



தெலுங்கு படமான ஜனதா கேரேஜ்-ல் பணியாற்றியதற்காக நடன இயக்குநர் ராஜூ சுந்தரத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் தனஞ்செயன், மோகன்லால் உள்ளிட்ட பலரும் தங்களுக்கான தேசிய விருதினை பெற்றுக் கொண்டனர்.



புலி முருகன் படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் தேசிய விருதினை பெற்றுக் கொண்டார். அதேபோல், இந்தியில் சோனம் கபூர், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோரும் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.






முன்னதாக, தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, ராஜ்வர்த்தன் ரத்தோர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News