செய்திகள்

பிரதமர் நரேந்திரமோடியுடன் தம்பிதுரை சந்திப்பு

Published On 2017-04-12 00:18 GMT   |   Update On 2017-04-12 00:18 GMT
பிரதமர் நரேந்திர மோடியை தம்பிதுரை, மைத்ரேயன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியை தம்பிதுரை, மைத்ரேயன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரு அணியினரும் அ.தி.மு.க. பெயரை பயன்படுத்த தேர்தல் கமிஷன் தடை விதித்தது. இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது.

பணப்பட்டுவாடா மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற வருமானவரி சோதனை காரணமாக தற்போது ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதற்கு யார் காரணம் என்பதில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் சசிகலா அணியை சேர்ந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.

இதுபோல ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பி.யும் பிரதமர் மோடியை சந்திதார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய மைத்ரேயன், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பிரதமரிடம் பேசியதாகவும், நட்பு ரீதியாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவித்தார்.

பிரதமருடனான சந்திப்பு குறித்து தம்பிதுரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

Similar News