செய்திகள்

அதிருப்தியால் கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து விலகல்

Published On 2017-03-16 12:17 GMT   |   Update On 2017-03-16 12:18 GMT
கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ விஸ்வஜித் ரானே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பனாஜி:

மனோகர் பாரிக்கர் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோவா சட்டசபையில் இன்று நடைபெற்றது. அப்போது  22 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாகவும், எதிராக 16 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான விஸ்வஜித் ரானே அவையை புறக்கணித்தார். இதனால், மனோகர் பாரிக்கர் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்த நிலையில், அதிருப்தி காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ விஸ்வஜித் ரானே அறிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறுகையில் “வாய்ப்புகள் இருந்தும் கோவாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. காங்கிரசில் தலைமை சரியில்லை. கனத்த இதயத்துடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன். ஆனால், ஒருபோதும் பா.ஜ.க கட்சியில் சேர மாட்டேன்” என்றார்.

விஸ்வஜித் ரானே தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தார். ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த சபாநாயகர் தன்னுடைய முடிவை ரானே மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News