செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு: அமைச்சரவை ஒப்புதல்

Published On 2017-03-15 14:39 GMT   |   Update On 2017-03-15 14:39 GMT
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படியானது இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படுகிறது.

இதன் மூலம், 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

இதேபோல், ஐ.ஐ.டி. சட்டத்திருத்த மசோதாவுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொதுத்துறை- தனியார் பங்களிப்புடன் ஐ.ஐ.டி.யை நடத்த இந்த மசோதா வகை செய்கிறது.

இதுதவிர ஆந்திராவுக்கு சிறப்பு நிதி ஒதுக்கவும், உ.பி.யில் ஹாண்டியா-வாரணாசி இடையே ஆறுவழிப்பாதை கொண்ட தேசிய நெடுஞ்சாலை அமைக்கவும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Similar News