செய்திகள்

முன்னாள் உ.பி. மந்திரி மீது வழக்கு பதிவு

Published On 2017-02-21 02:53 IST   |   Update On 2017-02-21 02:53:00 IST
ஓட்டல் ஊழியரை தாக்கிய குற்றத்திற்காக உத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் மந்திரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரா:

ஓட்டல் ஊழியரை தாக்கியதாக முன்னாள் மந்திரி அசோக் யாதவ் மற்றும் அவரது சகாக்கள் ஆறு பேர் மீது ரிந்தாபன் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

முன்னாள் மந்திரி அசோக் யாதவ், வைராக் ஸ்வரூப் பிரம்மச்சாரி மற்றும் ஆறுக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டல் நிறுவன தலைவரின் ஓட்டுநர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் மந்திரி மற்றும் அவரது சகாக்கள் ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து ரூ.50 லட்சம் கைப்பற்றவே அங்கு வந்ததாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். 

ஓட்டல் தலைவரின் ஓட்டுநர் வழங்கியுள்ள குற்றச்சாட்டுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், இது குறித்த விசாரனை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News