செய்திகள்

இளைஞர்களை பயங்கரவாதிகளாக காங்கிரஸ் சித்தரித்தது: பஞ்சாபில் பிரதமர் மோடி பேச்சு

Published On 2017-01-29 15:04 GMT   |   Update On 2017-01-29 15:04 GMT
இளைஞர்களை பயங்கரவாதிகளாக காங்கிரஸ் சித்தரித்தது என்று பஞ்சாப் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
ஜலந்தர்:

பஞ்சாப் மற்றும் கோவாவில் சில தினங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் களைகட்டி உள்ளது. பஞ்சாப்பில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது  பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கொட்காபுராவில் உள்ள தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

இளைஞர்களை பயங்கரவாதிகளாக காங்கிரஸ் சித்தரித்தது. மற்றவர்கள் சில இளைஞர்களை போதை மருந்துக்கு அடிமையானவர்களாக  சித்தரித்தது. பஞ்சாப் முதல்-மந்திரி பாதல் பஞ்சாப் நலனுக்கும், விவசாயிகள் மற்றும் மக்கள் நலனுக்கும் செலவு செய்தார். 

முதல்-மந்திரி பாதல் குறித்து சிலர் தவறாக பேசுவதை ஏற்று கொள்ள முடியாது. கோவா, பஞ்சாப்பில் தோல்வியடைவோம் என்பதை தெரிந்து கொண்டு தான் தேர்தல் ஆணையம் மீது ஆம் ஆத்மி கட்சியினர் புகார் கூறுகின்றனர். டெல்லியில் அவர்கள் செயல்பாடு காரணமாக அவர்கள் இங்கு தோல்வியை தழுவுவார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Similar News