செய்திகள்

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: குடியரசு தின விழாவில் ம.பி. முதல்-மந்திரி அறிவிப்பு

Published On 2017-01-26 16:02 GMT   |   Update On 2017-01-26 16:29 GMT
மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்வதாக முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார்.
போபால்:

மத்தியபிரதேச மாநிலத்தில் குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் ஓம் பிரகாஷ் கோலி தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து முதல்–மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்வதாக அறிவித்தார்.

அவர் பேசுகையில், ‘‘பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதாலும், அவை குப்பைகள் ஆக்கப்படுவதாலும் நமது சுற்றுச்சூழலும், சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் குப்பைகளை மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகள் சாப்பிடுவதால் அவை இறந்து போகின்றன. எனவே பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்கிறேன். பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பை நிறுத்திக்கொள்ள 3 மாதங்கள் அவகாசம் வழங்குகிறேன்’’ என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய ராணுவம் மேற்கொண்ட சர்ஜிக்கல் தாக்குதலையும், பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் வெகுவாக பாராட்டினார்.

Similar News