செய்திகள்

ஜல்லிக்கட்டு குறித்து மத்திய சுற்றுச் சூழல் மந்திரி தலைமையில் நாளை அவசரக் கூட்டம்

Published On 2017-01-18 13:08 GMT   |   Update On 2017-01-18 16:10 GMT
ஜல்லிக்கட்டு குறித்து முக்கிய முடிவெடுப்படுப்பது தொடர்பாக மத்திய சுற்றுச் சூழல் மந்திரி தலைமையில் நாளை டெல்லியில் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
புதுடெல்லி:

ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இந்த போராட்டங்களில் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர்.

சென்னை, அலங்காநல்லூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் தீயாக பரவி வருகின்றது.

போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க உள்ளார்.

இந்நிலையில், மத்திய சுற்றுச் சூழல் மந்திரி அனில் மாதவ் தாவே தலைமையில் ஜல்லிக்கட்டு குறித்து முக்கிய முடிவெடுப்படுப்பது தொடர்பாக நாளை டெல்லியில் அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
 
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தில் நாளை மதியம் 1 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மத்திய சுற்றுச் சூழல் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Similar News