செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

Published On 2017-01-16 22:36 GMT   |   Update On 2017-01-16 22:36 GMT
வாக்காளர்கள் பணம் வாங்க தூண்டியதாக புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது
புதுடெல்லி:

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள கோவா மாநிலத்தில் கடந்த 8-ந்தேதி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ‘காங்கிரஸ்- பா.ஜனதாவினர் பணம் கொடுக்க வருவார்கள். விலைவாசியை கருத்தில்கொண்டு, ரூ.5 ஆயிரத்துக்கு பதிலாக, ரூ.10 ஆயிரம் கேளுங்கள். ஆனால், ஓட்டு மட்டும் ஆம் ஆத்மிக்கு போடுங்கள்’ என்று அவர் பேசியதாக தேர்தல் கமிஷனுக்கு புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில், ‘உங்கள் பேச்சு, வாக்காளர்களை பணம் வாங்க தூண்டும் செயல். இதன்மூலம், நடத்தை விதிமுறையை மீறி இருக்கிறீர்கள். இதுகுறித்து 19-ந் தேதிக்குள் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், நாங்களாகவே முடிவு எடுப்போம்’ என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. 

Similar News