செய்திகள்

மேற்கு வங்கம் ; யாத்திரையில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

Published On 2017-01-15 16:26 GMT   |   Update On 2017-01-15 16:26 GMT
மேற்கு வங்காளத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளர்.
புதுடெல்லி;

மேற்கு வங்காளத்தில் உள்ள கங்கா சாகர் என்ற கங்கை தீவில் கடந்த இரண்டு நாட்களாக லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடினார்கள். அதன்பின் அவர்கள் கொல்கத்தாவிற்கு திரும்ப தயாரானார்கள். அப்போது ஒரு படகில் யாத்ரீகர்கள் ஏறுவதற்கு தயாரானர்கள்.

அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 5 யாத்ரீகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சில பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்நிலையில், அந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி பலியானவர்களின் குடும்பத்திற்கு  இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலியான 5 பேர்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News