செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்றால் அகிலேஷ் தான் முதல்வர்: முலாயம் சிங் பேட்டி

Published On 2017-01-09 22:47 IST   |   Update On 2017-01-09 22:47:00 IST
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் அடுத்த முதல்வர் என்று முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாடியில் தந்தை முலாயம் சிங், அவருடைய மகனும் முதல்–மந்திரியுமான அகிலேஷ் யாதவ் இடையே ஏற்பட்ட மோதல் அக்கட்சியில் பெரும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சண்டை சமீப காலமாக  உச்சக் கட்டத்தை எட்டி வருகிறது.

இந்நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றால் அகிலேஷ் யாதவ் தான் அடுத்த முதல்வர் என்று முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முலாயம் சிங், “சமாஜ்வாடி கட்சி ஒற்றுமையாக தான் உள்ளது. விரிசல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அகிலேஷ் தான் அடுத்த முதல்வர். அகிலேஷ் உடன் எந்த பிளவும் இல்லை” என்று கூறினார்.

இதனையடுத்து அகிலேஷ் யாதவும், முலாயம் சிங்கும் நாளை காலை மீண்டும் சந்தித்து பேச உள்ளனர். அப்போது உறவை பலப்படுத்து வது குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் நான் தான் என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று முலாய் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Similar News