செய்திகள்

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மன்மோகன் சிங் வெளியிட்டார்

Published On 2017-01-09 15:05 IST   |   Update On 2017-01-09 16:41:00 IST
பஞ்சாப் மாநில தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெளியிட்டுளார்.
புதுடெல்லி:
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 4-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. முக்கிய கட்சியான காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க கடும் முயற்சி எடுத்து வருகிறது. ஏற்கனவே, அக்கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியுன் தேர்தல் அறிக்கைஇன்று வெளியிடப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தல் அறிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டார். இந்நிகழ்சியில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் கேப்டன் அமரீந்தர்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய மன்மோகன்சிங் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்த அகாலி தளம்-பா.ஜ.க. அரசின் நிர்வாக சீர்கேடுகள் சரிசெய்யப்படும் என தெரிவித்தார்.

வேலையில்லாத இளைஞர்களுக்கு 2,500 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News