செய்திகள்

கட்சியிலிருந்து அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு அதிரடியாக சஸ்பெண்ட்

Published On 2016-12-29 20:59 GMT   |   Update On 2016-12-30 02:35 GMT
அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பெமா காண்டு உள்ளிட்ட 7 பேர் தங்களது கட்சியில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இடாநகர்:

அருணாச்சல பிரதேச மாநில சட்டசபை, 60 உறுப்பினர் உடையது. இதில், இரண்டு சுயேச்சைகளுடன் சேர்த்து, 47 உறுப்பினர் 

பலத்துடன், நபாம் துகி தலைமையில் காங்கிரஸ், ஆட்சி அமைத்தது. ஆனால், நபாம் துகிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கலிகோ புல் தலைமையில், 30 எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறியதால், காங்கிரஸ் ஆட்சி களைந்தது. பா.ஜ., ஆதரவுடன் கலிகோ புல் அடுத்த முதல்வராக பதவிஏற்றார்.

இதனையடுத்து நீதிமன்ற தலையீட்டு பிறகு அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக பேமா காண்டு கடந்த ஜூலை மாதம் பதவியேற்றார். சவுனாமீன் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

இந்நிலையில், அருணாச்சல் மக்கள் கட்சி, முதல்வரான பெமா காண்டு தனது கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவரோடு, துணை முதல்வர் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இவர்கள் அனைவரும் நீக்கம் செயப்பட்டனர். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News