செய்திகள்

தந்தை இல்லாத 700 பெண்களுக்கு இலவச திருமணம் செய்து வைத்த வைர வியாபாரி

Published On 2016-12-27 07:43 GMT   |   Update On 2016-12-27 07:43 GMT
தந்தையை இழந்த 700-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
சூரத்:

குஜராத் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சவானி. வைர வியாபாரியான இவர் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் தந்தையை இழந்த 236 பெண்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைத்திருக்கிறார். இதில் சுமார் 50,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

5 லட்சம் மதிப்பில் கட்டில், சோபா உட்பட வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களுடன் சீர்வரிசை அளித்து இந்த திருமணத்தை மகேஷ் சவானி விமரிசையாக நடத்தி வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் "கடந்த 2008-ம் ஆண்டு என்னிடம் வேலை செய்த ஒருவர் அவரின் மகள் திருமணத்துக்கு சிலநாட்களுக்கு முன் இறந்து விட்டார். அதிலிருந்து இதுபோல தந்தையை இழந்த பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து வருகிறேன்.

இதுவரை தந்தையை இழந்த சுமார் 700-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு எனது செலவில் திருமணம்  செய்து வைத்திருக்கிறேன்.அவர்கள் அனைவரும் என்னை அப்பா என்றே அழைக்கின்றனர்" என்றார்.

Similar News