செய்திகள்

தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஐ.சி.யூ வார்டில் திருமணம் செய்து கொண்ட மகன்

Published On 2016-12-21 18:58 IST   |   Update On 2016-12-21 18:58:00 IST
தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற மருத்துவமனையின் ஐ.சி.யூ வார்டு முன் மகன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் புனேவில் நிகழ்ந்துள்ளது.
புனே:

புனே பகுதியை சேர்ந்த தன்யானேஷ் என்.தேவ்(34) என்பவருக்கும் சுவர்ணா கலங்கே என்பவருக்கும் டிசம்பர் 18-ம் தேதி சதாரா பகுதியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக திருமணத்துக்கு சில நாட்கள் முன் தன்யாநேஷின் தந்தை நந்தகுமார் தேவ்க்கு மாரடைப்பு ஏற்பட உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாரடைப்புக்கு சிகிச்சை எடுத்து வந்த நந்தகுமார் அதிலிருந்து மீண்ட நிலையில் நுரையீரல் தொற்று நந்தகுமாரைத் தாக்கியது.
இதனால் வெண்டிலேட்டர் துணையுடன் நந்தகுமார் சுவாசிக்கும் நிலை ஏற்பட்டது. திருமணம் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் நந்தகுமார் மருத்துவமனையில் இருந்தது அனைவருக்கும் கவலையை அளித்தது.

இந்நிலையில் நந்தகுமார் உயிர் பிழைக்கலாம் அல்லது உயிர் பிழைக்காமலும் போகலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து விட்டது.

இதனைத் தொடர்ந்து தனது உறவினர்கள் மற்றும் மணப்பெண்ணின் உறவினர்கள் ஆகியோருடன் கலந்து பேசிய நந்தகுமார் மருத்துவமனை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, தனது தந்தை அனுமதிக்கப்பட்டிருந்த ஐ.சி.யூ வார்டுக்கு முன் எளிமையாக மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார்.

மகன் திருமணம் முடித்த மகிழ்ச்சியில் இருந்த நந்தகுமார் தன்யானேஷ் திருமணம் முடிந்த 12 மணி நேரங்களில் அதாவது டிசம்பர் 18-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News