செய்திகள்

ரூ. 8.22 லட்சத்தை மாற்றிய ரெயில்வே அதிகாரி சி.பி.ஐ. பிடியில் சிக்கினார்

Published On 2016-12-17 13:08 IST   |   Update On 2016-12-17 13:08:00 IST
வங்கியில் ரூ.8.22 லட்சத்தை மாற்றிய ரெயில்வே அதிகாரி சி.பி.ஐ. பிடியில் சிக்கினார். இதையடுத்து அந்த அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
புதுடெல்லி:

டெல்லியைச்சேர்ந்த ரெயில்வே அதிகாரி ஒருவர் தனது வங்கி கணக்கில் ரூ. 8.22 லட்சத்தை மாற்றினார். அவர் ரெயில்வேயில் உதவி வணிகமேலாளராக பதவி வகிக்கிறார்.

பழைய ரூ.500. ரூ.1000 நோட்டுகளை அவர் வங்கியில் செலுத்தி பணம் மாற்றம் செய்ததை சி.பி.ஐ. கண்டு பிடித்தது. இதையடுத்து அந்த அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அதிகாரியின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Similar News