செய்திகள்

பல்வேறு புதிய அம்சங்களுடன் பானாசோனிக் P88 இந்தியாவில் அறிமுகம்

Published On 2016-12-15 21:32 IST   |   Update On 2016-12-15 21:32:00 IST
இந்திய சந்தையில் பானாசோனிக் நிறுவனம் புதிய P88 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் பானாசோனிக் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. P88 என அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதோடு 4G தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. 

பானாசோனிக் P88 ஸ்மார்ட்போனில் 5.3 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 2.5D வளைந்த கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் 2GB ரேம் மற்றும் 16GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 128GB வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 13 எம்பி பிரைமரி கேமரா மூன்று எல்இடி பிளாஷ் மற்றும் ஒற்றை எல்இடி பிளாஷ் கொண்ட 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 

4G தொழில்நுட்பம் கொண்ட டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் பானாசோனிக் P88 ஸ்மார்ட்போன் இரு வித நிறங்களில் கிடைக்கின்றது. 2600 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் எப்எம் ரேடியோ உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.

Similar News