செய்திகள்

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: காங். முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published On 2016-12-15 19:40 IST   |   Update On 2016-12-15 19:41:00 IST
பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் அமரிந்தர் சிங் பாட்டியாலாவில் போட்டியிடுகிறார்.
பஞ்சாப் மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி முதற்கட்டமாக 61 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அம்மாநிலை காங்கிரஸ் தலைவர் அமரிந்தர் சிங் பாட்டியாலா பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஜிந்தர் கவுர் பட்டால், சுனில் ஜாகர், சரண்ஜித் சானி போன்றோருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

117 சட்டசபை தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் மாதம் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அங்கு ஷிரோன்மணி அகாலி தளம் - பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

Similar News